×
Saravana Stores

முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற 1000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு பகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 4வது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் தலைமை தாங்கி, 100 கர்ப்பிணி களுக்கு துணிமணிகள், ஜாக்கெட், மஞ்சள் தாலி, குங்குமம், பழங்கள், கலவை சாதங்கள், காய்கறி, கீரை, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து குருவிமலை பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பீரோ, கட்டில்கள் வழங்கப்பட்டது. 3 இருளர் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது. மாலையில் 1000 குடும் பங்களுக்கு அறுசுவை உணவு மற்றும் பிரியாணிகள் வழங்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kanchipuram ,Sewilimedu ,Biryani ,M.K.Stalin ,Kanchipuram Corporation ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை