×

தீவிரமாகும் போராட்டம்!: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ல் காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி மூட்டையாக வாய்க்காலில் வீசிய வழக்கில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி சிறுமி படுகொலையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்டத்தை துவங்கியிருக்கிறார்.

புதுவையில் அதிக போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக அ.தி.மு.க குற்றம்சாட்டியுள்ளது. கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புதுச்சேரி அ.தி.மு.க கடுமையாக சாடியுள்ளது. இன்னொரு பக்கம் புதுவையின் மூலை முடுக்கெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே கருப்பு உடை அணிந்து தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டம் அடுத்தடுத்து எப்படி உருவெடுக்கும் என புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

The post தீவிரமாகும் போராட்டம்!: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Vaykal ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...