×

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 11 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 11 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் 5 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என சிண்டிகேட் குழு முடிவெடுத்து இருந்த நிலையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 11 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் பல்கலைக்கழக தேர்வுகளுக்கு சிக்கல் இல்லை தேர்தல் முடிந்த பிறகு தான் பல்கலைக்கழக தேர்வு தொடங்கும் என்பதால் இடையூறு இருக்காது என்றும் கூறினார்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 11 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Vice-Chancellor ,Velraj ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...