×

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் பல்லாயிரம் கோடிகளை இழந்துள்ளார் மார்க் சக்கர்பெர்க்!

வாஷிங்டன் : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால், சுமார் ரூ. 23,127 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது. Bloomberg பில்லியனர்கள் குறியீட்டில் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் $2.79 பில்லியன் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது.

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ், வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகள் உலகின் முன்னணி சமூக ஊடக தளங்களாக விளங்குகின்றன. உலகம் முழுவதும் 300 கோடிக்கு அதிகமான பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென முடங்கியது.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனர்கள் அனைவரும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் தங்களது புகார்களை அடுக்கினர். இதற்கிடையே தொழிற்நுட்ப கோளாறை சரிசெய்து வருவதாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.

ஒரு மணிநேரத்திற்கு மேலாக முடங்கி இருந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பின்னர் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே அமெரிக்கா பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனம் பங்குகள் சரிவை சந்தித்தன.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால், சுமார் ரூ. 23,127 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது. Bloomberg பில்லியனர்கள் குறியீட்டில் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் $2.79 பில்லியன் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்.

The post ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் பல்லாயிரம் கோடிகளை இழந்துள்ளார் மார்க் சக்கர்பெர்க்! appeared first on Dinakaran.

Tags : Mark Zuckerberg ,Facebook ,Instagram ,Washington ,Meta Company ,Bloomberg ,Dinakaran ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்