×
Saravana Stores

மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் தலைகீழாக வேன் கவிழ்ந்ததில் 12 பேர் காயம்..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நீதிமன்றம் அருகே சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு விருந்துக்கு சுமார் 16 பெரியவர்கள் 8 பெரியவர்கள் என 24 பேர் வேனில் பயணம் செய்துள்ளனர். மதுராந்தகம் அருகே வந்து கொண்டிருந்த போது வேன் பஞ்சர் ஆகியுள்ளது. எனவே பஞ்சர் போட்டுகொண்டு வேன் சென்ற போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேன் கவிழ்ந்த இடம் பள்ளமாக இருந்தாலும் குப்பை கிடங்கு என்பதால் வேனில் பயணம் செய்த 24 பேரில் 4 குழந்தைகள், பெண்கள், 2 ஆண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்களை உடனடியாக மதுராந்தகம் காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். விபத்தில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

The post மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் தலைகீழாக வேன் கவிழ்ந்ததில் 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Madhurantagam ,Chengalpattu ,Madurandakam ,Chengalpattu District ,Madhuranthakam ,Chennai ,Trichy National Highway ,Kilipakkam ,Tiruvannamalai ,
× RELATED மதுராந்தகம் அருகே தேசிய...