×

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் சிலமணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா நிறுவன பங்குகள் சரிவு..!!

அமெரிக்கா: மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு சில மணிநேரம் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகள் உலகின் முன்னணி சமூக ஊடக தளங்களாக விளங்குகின்றன.

உலகம் முழுவதும் 300 கோடிக்கு அதிகமான பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென முடங்கியது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். பேஸ்புக் செயலியில் பயனர்களின் கணக்கு லாக் அவுட் ஆகியதால் சைபர் தாக்குதல் நடந்திருக்கலாம் என பலரும் அச்சம் அடைந்தார்கள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனர்கள் அனைவரும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் தங்களது புகார்களை அடுக்கினர். இதற்கிடையே தொழிற்நுட்ப கோளாறை சரிசெய்து வருவதாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்தார். ஒரு மணிநேரத்திற்கு மேலாக முடங்கி இருந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பின்னர் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே அமெரிக்கா பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனம் பங்குகள் சரிவை சந்தித்தன.

 

The post உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் சிலமணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா நிறுவன பங்குகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Meta ,US ,Facebook ,Instagram ,USA ,WhatsApp ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!