- திருநெல்வேலி
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- பங்குடி புறநகர்
- திருநெல்வேலி மாவட்டம்
- கே. ஸ்டாலின்
- Panakudi
- சுகாதார தொழிலாளர் அ
- ராதபுர வட்டம், பனக்குடி வட்டாரம்-2 கிராமம்
- முதலமைச்சர் எல்எலா கே.
- தின மலர்
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பணகுடி பகுதி-2 கிராமம், பணகுடி தூய்மைப் பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் வசந்தி (வயது 38) க/பெ.முத்துக்குட்டி என்பவர் ஈஸ்ட் விசன் சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனம் மூலம் பணகுடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 29.02.2024 அன்று பிற்பகல் பணகுடி புறவழிச்சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில், இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்கைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வசந்தியின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
The post திருநெல்வேலியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.