×

அரூரில் வாகன தணிக்கை ₹8 லட்சம் அபராதம் வசூல்

அரூர், மார்ச் 6: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையிலான அலுவலர்கள், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில், கடந்த ஒரு மாதத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் 368 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்தது, அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிவந்தது, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்திய வாகனங்கள் உள்ளிட்ட 174 வாகனங்களுக்கு வரியாக ₹1,68,275ம், அபராதமாக ₹6,38,700 என மொத்தம் ₹8,06,975 அபராதம் விதிக்கப்பட்டது. முறையான ஆவணம் இல்லாத 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில், ‘வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது. கடடாயம் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்ட வேண்டும். வாகனம் முன், பின்பக்கம் பம்பர் இருந்தால் அவற்றை அகற்றிட வேண்டும்’ என்றார்.

The post அரூரில் வாகன தணிக்கை ₹8 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Aruro ,Kulothungan ,Aruro Bypass Road ,Gopinathambatti Road ,Samiyapuram Road ,Manjawadi Pass ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி