×

திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு தூய்மை பணி முகாம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி சிறப்பு முகாம் வேளூர்பொருளுதவி பெறும் தொடக்கப் பள்ளி தூய்மைப் பணி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 மற்றும் 2 ன் மாணவ மாணவிகளால் செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் பாலகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மாறன் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 ன் அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக் குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன் விளக்கி பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 மற்றும் 2 ன் மாணவ, மாணவிகளுடன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் திலகர், பேராசிரியர்கள் லோகநாதன் மற்றும் வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ன் அலுவலர் நந்தினி நன்றி கூறினார்.

The post திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு தூய்மை பணி முகாம் appeared first on Dinakaran.

Tags : NSS ,Government Arts College ,Thiruthurapundi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Thandalaicherry ,Government College of Arts and Science ,Special Camp ,Veluru ,Dinakaran ,
× RELATED உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு