×

ஒரத்தூரில் ₹254 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேவை நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ₹ 498.35 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம், முடிவுற்ற பணிகள்

மயிலாடுதுறை, மார்ச் 5: மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ₹150 கோடியே 42 லட்சம் செலவில் 34 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். மேலும், ₹80 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 8032 பயனாளிகளுக்கு ₹128 கோடியே 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ₹259 கோடியே 31 லட்சம் செலவில் 5 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து ₹7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2660 பயனாளிகளுக்கு ₹9 கோடியே 34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: முன்னதாக விழாவுக்கு வருகை தந்த முதல்வருக்கு திமுக ஏராளமான உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் புறங்களில் மேளதாளம் முழங்க வரவேற்றனர். இதுபோல் ஒன்றியத்திலும் மலர்த்துவி வரவேற்றனர். இதில் நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான செல்வராஜ், நகர மன்ற துணைத்தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கழக வழக்கறிஞர் புகழரசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி.எஸ்.பிரபாகரன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தர், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தர், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், துணைத்தலைவர், முருகப்பா, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன், நகர மன்ற உறுப்பினர்கள்,மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான முதலமைச்சரை வரவேற்றனர்.

The post ஒரத்தூரில் ₹254 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேவை நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ₹ 498.35 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம், முடிவுற்ற பணிகள் appeared first on Dinakaran.

Tags : Government Medical College Hospital Service ,Orathur ,Nagapattinam, ,Mayiladuthurai ,Chief Minister ,M. K. Stalin ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...