×

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு எப்போது? நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில்நடைபெற உள்ளது. அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. திமுகவை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை எந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

அதே போல காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களுக்கான தொகுதிகள் இந்த வாரத்தில் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைசெயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு நிலவரம், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தும் முடிவாகியுள்ளது.

இதையடுத்து விரைவில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்த பின்னர், வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியில் திமுக முழுவீச்சில் இறங்கியுள்ளது. இம்முறை கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. இம்முறை கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

The post திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு எப்போது? நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Tamil Nadu ,AIADMK ,DMK alliance ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...