×

முதல்வர்மு.க.ஸ்டாலின் என்றாலே மோடிக்கு கை, கால் எல்லாம் உதறுகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றாலே பிரதமர் மோடிக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்கிறது என்று காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி.,எஸ்டி., பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.ஸ்டாலினின் பெரும் முயற்சியில் இந்தியா கூட்டணி கட்டமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றாலே பிரதமர் மோடிக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்க தொடங்கி விட்டது. இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும் மு.க.ஸ்டாலின் தான் அவரது முதல் குறியாக இருக்கிறது. அந்த அளவுக்கு மோடியின் கண்களில் பயத்தைக் காட்டியிருக்கிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வடமாநிலங்களில் சமீபகாலமாக மோடிக்கும் பாஜவுக்கும் எதிராக இளைஞர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் ஓட்டுக்களைப் பெற முடியுமா என்ற நோக்கில் தொடர்ந்து இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பாஜ கூட்டத்தில் பேசிய மோடி, ஏதோ வழிப்போக்கர் போல ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக திமுக மீது குறை கூறியிருக்கிறார். பாஜ தொடங்குவதற்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த கட்சி திமுக. முதல் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது. காமலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். அதேபோல் தேர்தல் நன்கொடை பத்திரம் என்ற மெகா ஊழலில் ஈடுபட்டு உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட மோடி, இன்றைக்கு ஆதாரமே இல்லாமல் திமுக மீது புகாரைச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர்மு.க.ஸ்டாலின் என்றாலே மோடிக்கு கை, கால் எல்லாம் உதறுகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stalin ,Congress ,CHENNAI ,Congress SC ,ST ,president ,Tamil Nadu Congress SC ,ST. Division ,Ranjan Kumar ,DMK ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...