×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக 2006ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் உத்தரவிட்டிருந்தது. இதை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை தள்ளிவைக்க கோரினார். இதை ஏற்று நீதிபதி, விசாரணையை மார்ச் 25 மற்றும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anti-Corruption Department ,O. Panneerselvam ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!