×

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் ஒப்புதல்

புதுடெல்லி: ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் மூலம் தொழிலில் ஆதாயம் பெறும் இந்திய நிறுவனங்கள் 11 முதல் 26 சதவீத சேவைக் கட்டணம் செலுத்த கூகுள் நிறுவனம் வலியுறுத்தியது. இந்நிலையில் தங்களது கட்டண கொள்கைக்கு இணங்கவில்லை எனக்கூறி கடந்த வாரம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில முன்னணி இந்திய நிறுவனங்களின் ஆப்களை கூகுள் நீக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனை தொடர்ந்து ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய நிறுவனங்களின் ஆப்களை மீண்டும் கொண்டுவருவதற்கு கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘சர்ச்சைக்குரிய கட்டண சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Google ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...