×
Saravana Stores

ம.பி.யில் நீதி யாத்திரை ராகுலை வரவேற்ற பாஜவினர்: கைக்குலுக்கி, பறக்கும் முத்தம் தந்தார்

ஷாஜபூர்: மத்தியபிரதேசத்தில ராகுலின் நீதி யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தியை பாஜவினர் வரவேற்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை பாஜ ஆளும் மத்தியபிரதேச மாநிலத்துக்குள் கடந்த சனிக்கிழமை நுழைந்தது. நேற்று அங்குள்ள ஷாஜபூர் நகருக்குள் யாத்திரை நுழைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பாஜ கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மோடி, மோடி என கோஷங்களை எழுப்பினர்.

உடனே வாகனத்தை நிறுத்தி விட்டு பாஜ தொண்டர்களை நோக்கி ராகுல் காந்தி சென்றார். அப்போது பாஜவினர் ஜெய்ராம் என முழக்கமிட்டனர். கோஷமெழுப்பிய பாஜவினரிடம் சென்று ராகுல் காந்தி கைக்குலுக்கி, சிறிது நேரம் பேசி விட்டு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜ பிரமுகர் முகேஷ் துபே, “ராகுல் காந்தியை நாங்கள் வரவேற்றோம். அவருக்கு உருளைக்கிழங்குகளையும் பரிசாக கொடுத்தோம். ராகுல் காந்தி என்னிடம் பேசியபோது, நாங்கள் அவரை வரவேற்பதாக தெரிவித்தேன்” என்று கூறினார்.

அனைத்து துறையிலும் சமூக அநீதி – ராகுல் குற்றச்சாட்டு
ஷாஜபூரில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் அனைத்து துறைகளிலும் சமூக அநீதி நிலவுகிறது.மக்கள் தொகையில் 90 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட,தலித் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த யாரும் எந்த முக்கிய பதவியையும் வகிக்கவில்லை. ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜ, மக்களிடையே மதம், சாதி, இனம், மொழியின் அடிப்படையில் பேதம் கற்பித்து சண்டையை ஏற்படுத்துகிறது” என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

ராகுலுக்கு சம்மன் – அசாம் முதல்வர்
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் அசாமின் கவுகாத்தியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தடுக்கும் விதமாக காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை வைத்திருந்தனர். அந்த தடுப்புகளை காங்கிரசார் உடைத்து சேதப்படுத்தியதாக கவுகாத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

The post ம.பி.யில் நீதி யாத்திரை ராகுலை வரவேற்ற பாஜவினர்: கைக்குலுக்கி, பறக்கும் முத்தம் தந்தார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Justice Yatra ,Rahul ,Shahjapur ,Rahul Gandhi ,Neeti Yatra ,Madhya Pradesh ,Congress ,President ,India ,
× RELATED பாதுகாப்பு துறையிலும் ஏகபோகம் அதானி...