×

மீன்வளர்ப்பு கருத்தரங்கில் 10 பேருக்கு ரூ.1.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

விருதுநகர், மார்ச் 6:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பேசுகையில், தமிழக அரசின் வேளாண்துறை விவசாயிகள், அதிக வருமான ஈட்ட வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் மீன்வளத்துறையில் பெரிய நிலங்கள் இருக்க கூடிய பகுதிகளில் பண்ணைக்குட்டை அமைத்து அதன்மூலம் நீரை சேமித்து கொள்வது மட்டுமல்லாமல் அதில் மீன் வளர்க்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

அதற்கு அரசின் திட்டங்களும், மானியங்களும் இருக்கின்றன.விவசாயிகள் கற்றுக்கொண்டு மீன்களை சரியாக வளர்த்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிக எடை வளரக்கூடிய மீன்வளர்ப்பு மிகவும் லாபகரமாக இருக்கும். அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து குறைவாக, புரதச்சத்து அதிகமாக உள்ள மீன் உணவுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதை சந்தைப்படுத்தும் உத்தியை கற்றுக்கொள்ள வேண்டும். அலங்கார மீன்வளர்ப்பிலும் சந்தை வாய்ப்புகள் உள்ளன என்றார்.  நிகழ்ச்சியில் 10 பேருக்கு 50 சத மானியத்தில் ரூ.1.95 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், பரிசல்களை வழங்கினார். கருத்தரங்கில் வேளாண் இணை இயக்குநகர் விஜயா, மீன்வளத்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் காசிநாதபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மீன்வளர்ப்பு கருத்தரங்கில் 10 பேருக்கு ரூ.1.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Aquaculture Seminar ,Virudhunagar ,Virudhunagar Collector's Office ,Jayaseelan ,Agriculture Department of the Tamil Nadu Government ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...