×

பரமக்குடியில் திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம்

 

பரமக்குடி, மார்ச் 6: திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் 2024ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையின் விளக்க பொதுக்கூட்டம் பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி தலைமையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் விபி ராசன் கலந்துகொண்டு அதிமுக, பாஜக தமிழக மக்களுக்கும், மாணவர்களுக்கும் செய்த துரோகங்களையும், விவசாயிகளை மதிக்காத பாஜக அரசுக்கு எதிராக சிறப்புரையாற்றினார். விழாவில் எம்பி நவாஸ் கனி, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் திசைவீரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்எம்டி அருளானந்த், பூமிநாதன், தீர்மான குழு துணை தலைவர் திவாகரன்,

தேர்தல் பணிக் குழு துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி,சக்தி கதிரவன், குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகர மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் வட்டபிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடியில் திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Paramakudi ,Paramakudi Nagar ,Sethu Karunanidhi ,Murugesan.… ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு