×

மகளிர் தினம் கொண்டாட்டம்

 

மதுரை, மார்ச் 6: மதுரை புதூர் அல்-அமீன் பள்ளியில் மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைவர் புலவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நாவினி நாசர் வரவேற்றார். விழாவில் அமலகலைச்செல்வி, சுமதி, லதா, சர்மிளா, ஆனந்தவள்ளி, சண்முகப்பிரியா, பொய்யாமொழி, கிருஷ்ணவேணி, ராணியாஸ்மின் ஆகியோருக்கு மகளிர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் நேரு விருது பெற்றவர்களை வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினார். மகளிர் தின உரையாற்றிய குழந்தைகளுக்கு அல்-அமீன் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி பாராட்டி பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் எழுத்தாளர் குடியாத்தம் தேன்மொழி மற்றும் பேராசிரியர் அனார்கலி ஆகியோருக்கு ‘‘ஆளுமை மகளிர்” விருது வழங்கப்பட்டது.

விழாவில் கவிஞர் மூரா, மருத்துவர்கள் காளிதாசன், திலகவதி, பாவலர் முருகானந்தம், செல்வகுமரேசன், இளவரசன், அறிவானந்தம், அன்புமதி, ஆறுமுகம், ஒளிப்படக் கலைஞர் சுந்தரகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தமிழ்வாசுகி, வாசகர்வட்டம், தமிழியக்கம், சிவகங்கை தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை நட்பு வட்ட பொறுப்பாளர்கள் நிர்மலா தேவி, மகாராணி செய்திருந்தனர். வழக்குரைஞர் ஆசைதம்பி நன்றி கூறினார்.

The post மகளிர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's day ,Madurai ,Madurai Friendship ,Tamil Circle ,Budoor ,Al-Amin School ,President ,Bulavar Arumugam ,Navini Nasser ,Amalakalachelvi ,Sumathi ,Latha ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!