- ஊட்டச்சத்து சர்வதேச மாநாடு
- அமெரிக்க
- கல்லூரி
- மதுரை
- மதுரை அமெரிக்கன் கல்லூரி
- உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை
- நித்யா. கல்லூரி
- பிந்தைய அமெரிக்க கல்லூரி சர்வதேச
- தின மலர்
மதுரை, மார்ச் 6: மதுரை அமெரிக்கன் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உயிரி தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் ஊட்டச்சத்து குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு தொடங்கியது. இதில் முதுகலை துறை தலைவர் நித்யா வரவேற்றார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள அமெரிக்க-பங்களா பல்கலைக்கழக இயக்குநர் ருக்சனா சிறப்புரையாற்றினார்.
மும்பை அமித்தி பல்கலைக்கழக துணைவேந்தர் வில்சன் அருணி முகவுரை ஆற்றினார். 146 ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட புத்தகத்தை கல்லூரி முதல்வர் வெளியிட ருக்சனா மற்றும் வில்சன் அருணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதி காப்பாளர் பியூலா ரூபி கமலம் கலந்து கொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இளங்கலை துறை தலைவர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
The post அமெரிக்கன் கல்லூரியில் சர்வதேச ஊட்டச்சத்து மாநாடு appeared first on Dinakaran.