×

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து அதிகாரி தகவல்

 

திண்டுக்கல், மார்ச் 6: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வவர். இதையொட்டி அதிகளவு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவதானப்பட்டி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பயணத்திற்கு வத்தலக்குண்டு, பெரியகுளம், தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti Moongilani Kamachi Amman Temple Festival ,Dindigul ,Devadhanapatti Moongilani Kamachi Amman temple festival ,Dindigul State Transport Corporation ,Zonal ,Management ,Theni district ,Devadhanapatti ,Kamachi Amman temple festival ,Dinakaran ,
× RELATED ரூ.4.68 கோடி முறைகேடு விவகாரம்...