நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் நடிகர் நானா படேகர் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசாங்கத்திடம் எதையும் கோர வேண்டாம். நல்ல நாட்களுக்காக காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களை கொண்டு வர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நாட்டில் 50 சதவீதம் உள்ள விவசாயிகளான நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள் ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான இலட்சியத்தை முன்வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post நல்ல நாளுக்காக காத்திருக்க வேண்டாம்; நீங்கள் விரும்பும் அரசை உருவாக்க வேண்டும்: விவசாயிகள் கூட்டத்தில் நடிகர் நானா படேகர் பேச்சு appeared first on Dinakaran.