×

இஎஸ்ஐ மருத்துவமனையில் பயனாளர்களின் ஆதார் எண் இணைக்கும் முகாம்

 

கோவை, மார்ச் 6: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐ) பயனாளர்கள் தங்களின் ஆதார் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாம் மூலமாக இஎஸ்ஐ பயனாளர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இஎஸ்ஐ அட்டையில் உள்ள அனைவரின் ஆதார் எண்ணும் இணைக்க வேண்டும் என்பதால், சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இஎஸ்ஐ பயனாளர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதனால் இஎஸ்ஐ பயனாளர் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு, சிறப்பு எண் உருவாக்கப்படும். இந்த எண் அடிப்படையில் நோயாளியின் ஹெல்த் ரெக்கார்டு பதிவு செய்யப்படும். இதனால் டிஜிட்டல் முறையில் பல்வேறு மருத்துவமனைகளுடன் நோயாளிகளின் பதிவேடுகள் பகிர முடியும். கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் நிலை இருக்காது.

மேலும், இஎஸ்ஐ மருத்துவ சேவைகள் மற்றும் பயன்களை பெறும் நபர்கள் குறித்த விவரங்களை எளிதாக கண்டறியப்படும். எனவே, பயனாளர்கள் இஎஸ்ஐ கார்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான முகாம் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் நடக்கிறது. தவிர, https://esic.gov.in என்ற முகவரிக்கு சென்று பயனாளர்களே தங்களின் ஆதார் எண்ணை இணைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இஎஸ்ஐ மருத்துவமனையில் பயனாளர்களின் ஆதார் எண் இணைக்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : ESI Hospital ,Coimbatore ,State Insurance Corporation ,ESI ,Singhanallur ESI Medical College Hospital ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்