×

சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருது

 

ஈரோடு, மார்ச் 6: சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு ரூ.1.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கும் பல்கலைக்கழகங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பனை ஏறும் இயந்திரம் கருவி கண்டுபிடிப்பவர் ஒருவருக்கு விருது வழங்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்ட கலைத்துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வலர்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Erode ,Office of the Director of Horticulture and Upland Crops ,Tamil Nadu ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...