×

முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு

 

ஆவடி: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் சா.மு நாசர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. திமுக சார்பில், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகர் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆவடியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான சா.மு.நாசர் இதில் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உதயநிதி ஸ்டாலின் குறித்து பாடல் ஒன்றை பாடி பேச்சை ஆரம்பித்தார், இதையடுத்து நிருபர்களிடம் திண்டுக்கல் லியோனி கூறுகையில், தேர்தலில் மிகச் சிறப்பாக தனது பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வாரத்திற்கு நான்கு முறை வந்தால்கூட கண்டிப்பாக நோட்டாவுக்கு கீழ்தான் தமிழக மக்கள் பாஜவுக்கு வாக்களிப்பார்கள். கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இதனால் கூட்டணியில் எந்தப் பிளவும் ஏற்படாது. தமிழக பாடநூல் திட்டத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பழைய பாடநூல் திட்டமே அச்சடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

The post முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,PM ,Nasser MLA ,Avadi ,DMK ,President ,M.K. Stalin ,S.M. Nassar ,MLA ,M.K.Stal ,
× RELATED மக்களுடன் முதல்வர் திட்டம்