×

போலீசார், துணை ராணுவத்தினரின் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி

புழல்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், வாக்காளர்கள் எவ்வித அச்சம் மிரட்டலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக வாக்களிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செங்குன்றம் துணை போலீஸ் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

செங்குன்றம் பகுதியில் உள்ள புழலேறி மதகு அருகில் இருந்து செங்குன்றம் ஜிஎன்டி சாலை, காமராஜர் சிலை, மார்க்கெட் நெல்மண்டி மார்க்கெட், பேருந்து நிலையம், திருவள்ளூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மொண்டி அம்மன் நகர், பாடியநல்லூர் சிக்னல், முத்துராமலிங்கம் சாலை, அங்காள பரமேஸ்வரி கோவில், விளையாட்டு திடல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் செங்குன்றம் துணை ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட செங்குன்றம் சோழவரம் காட்டூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையிலிருந்து போலீசாரும், துணை ராணுவத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். செங்குன்றம் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், இன்ஸ்பெக்டர்கள் செங்குன்றம் புருஷோத்தமன், சுதாகர், ஷாம் வின்சென்ட், சோழவரம் மனோகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

The post போலீசார், துணை ராணுவத்தினரின் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Pune ,Vertical Sub-Police Commission ,Tamil Nadu ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...