செங்கல்பட்டு: செங்கல்பட்டில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கவுள்ளதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நாளை மறுதினம் (8.3.2024) முற்பகல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனயலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.