×

வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. முகூர்த்த நாள், வார இறுதிநாட்களை ஒட்டி பிப் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பிப். 8-ம் தேதி கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, திருப்பூருக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Klampakkam ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...