×

பட்டாணி தேங்காய்ப்பால் கறி

தேவையான பொருட்கள்

காய்ந்த பச்சை பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1
தேங்காய்ப்பால் – 2 கப் (முதல் பால் + இரண்டாம் பால் சேர்த்தது)
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

அரைக்க

கீறிய பச்சை மிளகாய் – 4
பூண்டு பற்கள் – 10
தனியா தூள் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

காய்ந்த பச்சை பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பின் நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு தனியா தூள் சேர்த்து கலந்து இறக்கவும். அவை ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைக்கவும். மசாலா 4 நிமிடங்கள் கொதித்து பச்சை வாசனை போனதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

The post பட்டாணி தேங்காய்ப்பால் கறி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...