×

வாழைக்காய் துவட்டல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2
பூண்டு பற்கள் – 3
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் ‌‌- 1.

செய்முறை

வாழைக்காயைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாழைக்காய் பாதி வெந்ததும் தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும். கடாயில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த வாழைக்காயைச் சேர்த்து தேங்காய் விழுதோடு நன்கு பிரட்டிக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெய்யை சுற்றி ஊற்றி நன்கு முறுகலாகும் வரை வறுக்கவும். வாழைக்காய் நன்கு முறுகியதும் இறக்கவும்.

The post வாழைக்காய் துவட்டல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...