×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் தலா 4%, இன்போஸிஸ், நெஸ்லே பங்குகள் தலா 1.9% விலை குறைந்தன. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49 புள்ளிகள் சரிந்து 22,356 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!