×

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை 22 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மின்சாரம், தீ தடுப்பு, காற்றோட்டம், ஏர் கண்டிஷனிங் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.137.86 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் (சோழிங்கநல்லூர் ஏரி-I முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை) மற்றும் வழித்தடம் 5-ல் (கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை) மெட்ரோ இரயில் நிலையங்களில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.137.86 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப் படுகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மாதவரம் – சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ), கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன.

குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன. மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப் படுகின்றன.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), Universal MEP Projects & Engineering Services நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் தலைவர் திரு.ஜெயந்த் தேஷ்பாண்டே மற்றும் தென் மண்டலத் தலைவர் பிப்லாப் சட்டோபாத்யாய் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் எஸ்.ராமசுப்பு, எஸ்.கே. நடராஜன், கூடுதல் பொது மேலாளர் கே.ரவிக்குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் Universal MEP Projects & Engineering Services நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Route ,CHENNAI ,Koyambedu Market ,Elcott Park Metro.… ,Dinakaran ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது