×

விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: தமிழக முதல்வர் மற்றும் அரசை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் விழுப்புரம் கோர்ட்டில் இன்று ஆஜரானார். அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக இரண்டு வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20-7-2023 அன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சம்மன் பெற்ற சி.வி.சண்முகம் இன்று (5ம் ேததி) நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார். இந்த வழக்கை மூன்றாவதாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பூர்ணிமாவிடம், சிவி.சண்முகத்தின் வழக்கறிஞர் ராதிகா செந்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மூன்று மாதங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி வருகிற 19ம் ேததி அன்று வக்காலத்து மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 19ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

The post விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CV Shanmugam ,Villupuram ,Court ,Former ,AIADMK ,minister ,Rajya Sabha ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu government ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...