×

ஒமிக்ரான் உருமாற்றம் கண்டறியும் ஆய்வு 12 ஆய்வகங்களுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸின் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறிய சிறப்பு ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வுகளை மேற்கொள்ள 12 ஆய்கவங்களுக்கு பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 12 ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெர்மோ டெக்பாத் நவீன கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். கொரோனா வைரஸில் உருமாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால், அவற்றை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு 7 நாட்களில் ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஒமிக்ரான் உருமாற்றம் கண்டறியும் ஆய்வு 12 ஆய்வகங்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்