×

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி கழிவுநீர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது. சிறுமியின் வீடு அருகே சாக்கடையில் சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையை சேர்ந்த சிறுமி ஆர்த்தி 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி கழிவுநீர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Arthi ,Muttialpattai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு