×

ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. களத்தில் இறங்கிய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்.. ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக கொடுத்த மாநில அரசு!!

ராஞ்சி : ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம். ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே 10 பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உள்ளது. வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.சந்திரசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து பொறுப்பு தலைமை நீதிபதி, சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் தலைமை செயலர், காவல் துறை டிஜிபி, துமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அறிக்கை அளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் 10 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக கொடுத்திருக்கிறது ஜார்கண்ட் மாநில அரசு.

The post ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. களத்தில் இறங்கிய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்.. ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக கொடுத்த மாநில அரசு!! appeared first on Dinakaran.

Tags : Spain ,Jharkhand High Court ,Ranchi ,Jharkhand ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...