×

மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

வழக்கமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் ஆகியோர் களமிறங்குவர். நேற்றைய போட்டியில் சோஃபி டிவைன்க்கு பதிலாக ஸ்மிருதி மந்தனா உடன் மேகனா களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணி 5.3வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அப்போது 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேகனா அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, ஸ்மிருதி மந்தனா உடன் கைகோர்த்தார். இருவரும் சேர்ந்து யுபி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை பறக்க விட்டனர். பெங்களூரு அணி 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிரடி காட்டி வந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி அரைசதம் விளாசினார். குறிப்பாக அவர் அடித்த ஒரு சிக்ஸர் காரின் கண்ணாடியை உடைத்து. 50 ரன்கள் எடுத்து அவர் அவுட் ஆனார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் அஞ்சலி சர்வாணி, தீப்தி சர்மா மற்றும் எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 199 ரணகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

The post மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Bengaluru ,UP Warriors ,Royal Challengers Bangalore ,Mumbai Indians ,Delhi Capitals ,Gujarat Giants ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...