×

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது 27,731 பேர் தேர்வு எழுதினர்

தஞ்சாவூர்,மார்ச்5: தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த 229 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 469 மாணவர்களும், 14 ஆயிரத்து 750 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 219 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள் 13 ஆயிரத்து 195 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 536 மட்டுமே தேர்வு எழுதினர். மாணவர்கள் 274 பேரும், மாணவிகள் 216 பேர் என 490 பேர் தேர் எழுதவில்லை.

தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே மாணவ -மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்றனர். பின்னர் கடும் சோதனைகளுக்கு பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கின ‌.

முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்வு தொடங்கின. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். கண்காணிப்பு பணியில் ஏராளமான ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

The post மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது 27,731 பேர் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu ,Tanjore ,
× RELATED தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்