×

மைவி3 நிறுவன உரிமையாளர் விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி?: பல்கலைக்கழகத்திடம் தகவல் சேகரிக்கும் போலீசார்

கோவை: மைவி3 ஆர்ட் நிறுவன உரிமையாளர் விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி? என்பது குறித்து பல்கலைக்கழகத்திடம் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் வி3 ஆன்லைன் டிவி, மைவி3 ஆட்ஸ் போன்ற நிறுவனங்களை தொடங்கி போலியான வாக்குறுதிகளை அளித்து பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளராக இருக்கும் கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் (43) என்பவர் மீதும் கோவை காவல் நிலையத்தில் மோசடி பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.

பின்னர், சத்தி ஆனந்தன் கமிஷனர் அலுவலகத்தில் சட்ட விரோதமாக கூடி முற்றுகை போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் ₹20 ஆயிரம் ேகாடிக்கு மேல் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயராகவன் போலி டாக்டர் பட்டத்தை வாங்கி உள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாங்கியதாக இவர் போலியான டாக்டர் பட்டத்தை காட்டி அதை வைத்து பெரும் முதலீடுகளை குவித்திருப்பதாக தெரிகிறது. இந்த டாக்டர் பட்டத்தை யார் மூலமாக எப்படி வாங்கினார்?, போலி டாக்டர் பட்டம் வாங்கி தரும் கும்பலின் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடக்கிறது.

இவரது நிறுவனங்களில் கூட்டாளிகளாக இருக்கும் சிலரும் போலி டாக்டர் வாங்கி அதை காட்டி முதலீடு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பல்வேறு விவரங்களை போலீசார் கேட்டிருப்பதாக தெரிகிறது. விஜயராகவன் சிலருக்கு கவுரவ டாக்டர் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை வைத்து என்ன செய்தார்கள்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
விஜயராகவன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுகர், பிரசர் அதிகமானதாக கூறி இவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

The post மைவி3 நிறுவன உரிமையாளர் விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி?: பல்கலைக்கழகத்திடம் தகவல் சேகரிக்கும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : MYV3 ,VIJAYARAGAVAN ,KOWAI ,MYV3 ART ,MADURAI ,Vijayargaon ,Dinakaran ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!