×

பிளஸ் 1 பொதுத்தேர்வு துவக்கம்

 

ராமநாதபுரம், மார்ச் 5: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மொழிப் (தமிழ்) பாடத்தை 14,335 எழுதினர். 230 பேர் தேர்விற்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி நேற்று துவங்கி மார்ச் 25ம் தேதி முடிவடைகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 14,565 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்தில் 63 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் மற்றும் மொழிப் பாடத் தேர்வில் 14,335 பேர் எழுதினர். 230 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ் 1 தேர்வை கண்காணிக்கும் பணியில் 63 பேர் கொண்ட பறக்கும் படையும், தலைமை கண்காணிப்பாளர்களாக 63 பேரும், அறைக் கண்காணிப்பாளர்களாக 1,054 பேரும் ஈடுபட்டுள்ளனர். மொழிப் பாடத்தில் 230 பேர் ஆப்சென்ட் ஆனது குறித்து தலைமையாசிரியர்களிடம் விரிவான அறிக்கை கேட்டுப் பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பிளஸ் 1 பொதுத்தேர்வு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...