×

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

 

பரமக்குடி,மார்ச் 5: தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நேற்று பரமக்குடியில் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தினர் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தலைவர் சேதுராமன், செயலாளர் காமராஜ், பொருளாளர் அரவிந்த் ராஜ், மூத்த வழக்கறிஞர்கள் ஆதி கோபாலன், தினகரன், முத்துக்கண்ணன், ராஜேந்திரன், சௌமிய நாராயணன், இளமுருகன், ஜானகிராமன்,பசுமலை மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Paramakkudi ,Paramakkudi Bar Association ,Rajaratnam Stadium ,Chennai, Egmore ,Tamil Nadu High Courts ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு