×

குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

 

ராமநாதபுரம், மார்ச் 5: ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் 10 பேருக்கு ரூ.63,750மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 24 பேருக்கு ரூ.1,27,611 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 34 பேருக்கு ரூ.1,91,361 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Collector ,Vishnu Chandran ,People's Grievance Day ,
× RELATED ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை