×

பீளமேடு நடை மேம்பாலம் அகற்றம்

 

கோவை, மார்ச் 5: கோவை பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரி பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இரு பகுதியிலும் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை கடக்க மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேம்பாலம் இருப்பதால் அவினாசி ரோட்டில் 1650 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி பாதிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிக்காக கல்லூரிக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த நடை மேம்பாலம் நேற்று அகற்றப்பட்டது.

இந்த மேம்பாலத்தை அகற்றியதால் மாணவ, மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த நடை மேம்பாலம் பீளமேடு பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்தது. இந்த மேம்பாலத்தை இழந்தது வருத்தமாக இருப்பதாக கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். அவினாசி ரோடு மேம்பாலம் பணி இறுதி கட்டத்தில் இருக்கிறது. நடை மேம்பாலம் அகற்றப்பட்ட பகுதியில் விரைவில் மேம்பாலம் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கவுள்ளனர்.

The post பீளமேடு நடை மேம்பாலம் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Beelamedu ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...