×

நாசரேத்தில் ₹26 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்

நாசரேத், மார்ச் 5: நாசரேத்தில் ₹26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நாசரேத் பேரூராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஊர் பொதுமக்களும், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினரும் நிதி வழங்கியதோடு அரசு சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, துவக்கிவைத்தார். துணைத்தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் திமுக நகரச் செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார்,இளநிலைப் பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

The post நாசரேத்தில் ₹26 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Nazareth ,Bhoomi Puja ,Tiruvalluvar Colony ,12th Ward ,Municipality ,
× RELATED மானூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு