×

காசிமேட்டில் ரூ.32 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடம்: எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்

தண்டையார்பேட்டை: காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலத்தில், உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், ஆர்கே நகர் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், காசிமேடு ஜீவரத்தினம் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கப்பட்டு, நவீன கருவிகளுடன் புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இப்பணிகள் அனைத்து முடிவடைந்து, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பெரம்பூர் எம்எல்ஏவுமான ஆர்.டி.சேகர், ஆர்கே நகர் எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஆர்கே நகர் கிழக்கு பகுதி செயலாளர் லட்சுமணன், 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா நரேஷ், திமுக நிர்வாகிகள், அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காசிமேட்டில் ரூ.32 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடம்: எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kasimat ,Thandaiyarpet ,Kasimedu Jeevaratnam Road ,RK Nagar MLA ,Legislative Assembly Constituency ,Kasimedu ,Dinakaran ,
× RELATED வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி...