×

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 315 வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 94 வருவாய் கோட்ட அலுவலங்களிலும், 38 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இரவு முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெய்க்கர் பிரபு, மாவட்ட பொருளாளர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.செந்தில்குமார், வசந்தி, செந்தில் முருகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் விஜய் ஆனந்த், கஜேந்திரன், யுகேந்தர் மத்திய செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஏ.மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இவர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Tamil Nadu Revenue Officers Association ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...