×

ஜூன் 15ம் தேதிக்குள் கட்சி அலுவலகத்தை காலி செய்ய ஆம்ஆத்மிக்கு உத்தரவு

புதுடெல்லி: நீதித்துறை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம்ஆத்மி அலுவலகங்களை காலி செய்ய வலியுறுத்தியது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது நீதிபதிகள் ‘வரும் ஜூன் 15ம் தேதிக்குள் ஆம்ஆத்மி கட்சி ரோஸ் அவென்யூவில் உள்ள அலுவலகத்தை காலி செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை அணுக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஜூன் 15ம் தேதிக்குள் கட்சி அலுவலகத்தை காலி செய்ய ஆம்ஆத்மிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AAP ,New Delhi ,Supreme Court ,Chief Justice ,DY Chandrachud ,Justices ,JP Pardiwala ,Manoj Mishra ,Aam Aadmi Party ,Rose Avenue ,Dinakaran ,
× RELATED ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய...