×

சான் டியேகோ ஓபன் போல்ட்டர் சாம்பியன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த சான் டியேகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிரேட் பிரிட்டன் வீராங்கனை கேத்தி போல்ட்டர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உக்ரைனின் மார்தா கோஸ்டியுக் உடன் மோதிய போல்ட்டர் 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 13 நிமிடத்துக்கு நீடித்தது. போல்ட்டர் வென்ற 2வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த நாட்டிங்காம் ஓபன் தொடரில் அவர் முதல் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.

The post சான் டியேகோ ஓபன் போல்ட்டர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : San Diego Open Bolter ,Washington ,Great Britain ,Cathy Boulter ,San Diego Open ,United States ,Poulter ,Ukraine ,Marta Kostiuk ,Dinakaran ,
× RELATED காதை கிழித்த தோட்டா.. துப்பாக்கிச் சூட்டால் சரிந்த டிரம்ப்