×

மின் விளக்கு அமைப்புடன் சாலைகள்; மாநகராட்சிக்கு அடையாளமாக கடலூர் சதுக்கம்: அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறப்பு

கடலூர் :கடலூர் மாநகராட்சி மாநில நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2022-23 திட்டத்தில் 1287 எண்ணிக்கை புதிய தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று கடலூர் ஆல் பேட்டையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாநகரின் அடையாளமாக கடலூர் சதக்கம் திறப்பு விழா கண்டது.

கடலூர் மாநகராட்சி 27.69 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டு 45 வார்டுகளை உள்ளடக்கியது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,636 ஆகும். தற்போதைய மக்கள் தொகை 1,98,987 ஆகும்.

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் மாநில ,நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1,287 எண்ணிக்கை புதிய தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ள மேற்கொள்ளப்பட்டு இதன் ஒரு பகுதியாக ரூ.63.50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் தெருவிளக்குகள் 186 எண்ணிக்கை 90 வாட் எல் இ டி விளக்குகள், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு. திருப்பாதிரிப்புலியூர் இம்பிரியல் ரோடு மற்றும் கடலூர் துறைமுகம் இம்பீரியல் ரோடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பணி முதற்கட்ட திறப்பு விழா மற்றும்

இதுபோன்று கடலூர் ஆல் பேட்டை  பகுதியில் கடலூர் மாநகரை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்குடன் கூடிய கடலூர் சதுக்கம் திறப்பு விழாவும் நடைபெற்றது. அது நடந்து விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார் .அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூர் சதுக்கத்தை திறந்து வைத்தும் பிரதான சாலைகளில் மின்விளக்குகளை செயல்பாட்டுக்கும் கொண்டு வரும் பணியினை துவக்கி வைத்தார்.

மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தார் .விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ,கூடுதல் ஆட்சியர் சரண்யா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் , திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால கலைக்கோவன் ,மண்டல குழு பிரசன்னா ,சங்கீதா குமரன், சங்கீதா செந்தில் முருகன் ,மாமன்ற உறுப்பினர்கள் ஆரா முது  ,சரஸ்வதி வேலுசாமி, புஷ்பலதா, சுபாஷ்ணி ராஜா ,பார்வதி, ஹேமலதா, திமுக மாணவரணி பாலாஜி பொறியாளர் அணி ராஜராஜன் நிர்வாகிகள் கார் வெங்கடேசன், சுந்தரமூர்த்தி, அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடலூர் சதுக்கம் திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அமைச்சர்  மற்றும் மேயர், அதிகாரிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

The post மின் விளக்கு அமைப்புடன் சாலைகள்; மாநகராட்சிக்கு அடையாளமாக கடலூர் சதுக்கம்: அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore Square ,Minister ,MRK Panirselvam ,Cuddalore ,Cuddalur ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...