×

சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

சென்னை: சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகை – ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு கௌதம் கார்த்திக்குக்கு ( வை ராஜா வை) அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் நடிகர் அரவிந்த்சாமிக்கு (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சிங்கம்புலிக்கு (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார். 2015-ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜிக்கு (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டது.

 

The post சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Government ,Tamil Nadu Film Awards ,Chennai ,Government of Tamil Nadu Film Awards ,Thani Oravan ,Pasanga 2 ,Praba ,
× RELATED கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும்...