×

இந்திய நகரங்கள், கிராமங்களில் புகையிலை, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்திய நகரங்கள், கிராமங்களில் புகையிலை, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் வெளியவந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒன்றிய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12ம் நிதியாண்டில் இந்திய நகரங்களில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவினம் ரூ.2,630. அதுவே கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.6,459 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2011-12ல் இந்திய கிராமங்களில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவினம் ரூ.1,430. அதுவே கடந்த 2022-23ல் ரூ.3,773 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2022-23ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு கிராமங்களில் குடும்ப செலவினம் ரூ.5,310 ஆகவும் நகரங்களில் ரூ.7,630 ஆகவும் உள்ளது. புதுச்சேரி கிராமங்களில் குடும்ப மாதாந்திர செலவினம் ரூ.6,590 ஆகவும் நகரங்களில் ரூ.7,706 ஆகவும் உள்ளது. கேரள கிராமங்களில் மாதாந்திர குடும்ப செலவினம் ரூ.5,924, நகரங்களில் ரூ.7,070, ஆந்திர கிராமங்களில் ரூ.4,870, நகரங்களில் ரூ.6,782, தெலங்கானா கிராமங்களில் ரூ.4,802, நகரங்களில் ரூ.8,158, கர்நாடக கிராமங்களில் ரூ.4,397, நகரங்களில் ரூ.7,666 ஆகவும் உள்ளது. கடந்த 2011-12-ல் இந்திய கிராமங்களில் புகையிலை, போதை பொருட்களின் பயன்பாடு 3.21 சதவீதமாக இருந்தது.

அதுவே கடந்த 2022-23ம் ஆண்டில் 3.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2011-12ல் இந்திய நகரங்களில் புகையிலை, போதை பொருட்களின் பயன்பாடு 1.61 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23ல் 2.43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2011-12ம் ஆண்டில் இந்திய கிராமங்களில் கல்வி செலவு 3.49 சதவீதம். அதுவே கடந்த 2022-23ம் ஆண்டில் 3.30 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதேபோல கடந்த 2011-12ம் ஆண்டில் இந்திய நகரங்களில் கல்வி செலவு 6.9 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23ம் ஆண்டில் 5.78 சதவீதமாக குறைந்திருக்கிறது.

 

The post இந்திய நகரங்கள், கிராமங்களில் புகையிலை, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian ,Union government ,New Delhi ,Office of National Statistics ,Dinakaran ,
× RELATED டெல்லி ஜந்தர் மந்தரில் மரம், செல்போன்...